பரஸ்பர பணிநீக்கத்திற்கு அதிகபட்சமாக 15 மாத நிதியுதவி!

பரஸ்பர பணிநீக்கத்திற்கு அதிகபட்சமாக 15 மாத நிதியுதவி!

பரஸ்பர ஒப்பந்தத்தின் (rupture conventionnelle) மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வேலை இழப்பு நிதியுதவி விதிகளில் மாற்றம் செய்ய தொழிற்சங்கங்களும் நிறுவனங்களும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

2024ஆம் ஆண்டு 5.15 லட்சம் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதால், 9.4 பில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளது.

 

புதிய திட்டத்தின்படி, 55 வயதுக்கு குறைவானவர்களுக்கு நிதியுதவி 15 மாதங்களாகவும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு 20.5 மாதங்களாகவும் குறைக்கப்படலாம். மேலும், மாதச் சம்பளம் 2,000 யூரோ அல்லது அதற்கு மேல் இருந்தால், 7ஆம் மாதத்திலிருந்து 30% நிதிக்குறைப்பு அமுல்படுத்தப்படும். இது வயது வேறுபாடின்றி பொருந்தும்.

 

தற்போது, அதிக வருமானம் பெறும் 55 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே குறைப்பு நடைமுறையில் உள்ளது. இந்த மாற்றம், பணிநீக்கத்திற்குப் பிறகு விரைவாக வேலைக்குத் திரும்ப ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

அதே நேரத்தில், கலைத்துறையின் இடைக்கால பணியாளர்களுக்கு வேலை இழப்பு நிதியுதவி பெற வேண்டிய குறைந்தபட்ச வேலை நேரம் 507 மணிநேரத்திலிருந்து 557 மணிநேரமாக உயர்த்தப்படலாம்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கான விதிகளும் திருத்தப்படலாம். அரசு குறைந்தது 400 மில்லியன் யூரோ சேமிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற விரும்புகிறது

Recommended For You

About the Author: admin