அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் (USS Gerald R. Ford) சுமார் 13 பில்லியன் டொலர் செலவில் வடிவமைக்கப்பட்டது.

அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் (USS Gerald R. Ford) சுமார் 13 பில்லியன் டொலர் செலவில் வடிவமைக்கப்பட்டது. ஈரானை தாக்குவதற்காக யுத்த வெறியில் மிதந்துக் கொண்டிருக்கும் அந்த இரும்பு நகரம், இன்று கழிப்பறையின் கழிவு நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘வெற்றிடக் கழிப்பறை’ (Vacuum-based sewage system) அமைப்பு, விமானங்களில் இருப்பதைப் போன்றது.

மிகவும் நவீனமானது என்று சொல்லப்படும் இந்தக் கப்பலின் கழிப்பறைகள், அமெரிக்க அரசியலைப் போல நாறி நாற்றமெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

கப்பலை ஆக்கிரமித்து வரும் இந்த கழிவு நீர் விவகாரம் டிரம்ப் நிர்வாகத்தை கொதி நிலைக்குத் தள்ளியுள்ளதோடு, அதிலுள்ள இராணுவத்தினரின் மன உறுதியையும் சிதறடித்துள்ளது.

சுமார் 4,600 இராணுவத்தினர் ஓராண்டு காலமாக அந்தக் கப்பலில் அடைப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 4,600 பணியாளர்கள் உள்ள இந்தக் கப்பலில் 650 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதுவும் பெரும்பாலான கழிவறைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவை நிரம்பி கழிவு நீரைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.

டி-ஷர்ட்டுகள், கயிறுகள் மற்றும் பிற பொருட்கள் கழிப்பறை குழாய்களில் சிக்கி இருப்பதால் இந்த அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த “அடைப்புகள்” கப்பலின் முழுப் பகுதியையும் பாதித்து வருகிறது. கழிப்பறைகளில் இராணுவத்தினர் தங்களின் டி-ஷர்ட்களைத் திணிப்பதாகவும், கப்பலில் ஒரு “மறைமுகக் கலகம்” நடப்பதாகவும் வதந்திகள் வெளிவந்து டிரம்பின் நிர்வாகத்தை ஒருபுறம் குடைந்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையால் கடற்படை வீரர்கள் கழிவறைக்குச் செல்ல 45 நிமிடங்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் கப்பலில் உள்ளவர்கள் கடுப்பேறியிருக்கிறார்கள். இத்தகைய உடல் உபாதைகளை அடக்கிக் கொண்டு போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் டிரப்பின் படை கடலில் தவித்துக் கொண்டிருக்கிறது.

கழிப்பறைப் பிரச்சனை இராணுவத்தின் மன வலிமையையும் சோதனைக்குள்ளாக்கி இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு, பணி நீடிப்பு என்ற அறிவித்தல் அவர்களுக்கு மத்தியில் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது.

தமது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் தீவிர மன உளைச்சலில் டிரம்பின் இராணுவம் தவித்துக் கொண்டிருக்கிறது.

நம்பகமான சர்வதேச அரசியல், ராணுவ செய்திகள் மற்றும் முக்கிய உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள..

Recommended For You

About the Author: admin