“ஐரோப்பாவை துண்டாடத் துடிக்கிறது டிரம்ப் நிர்வாகம்” –மக்ரோன் கடும் எச்சரிக்கை!

“ஐரோப்பாவை துண்டாடத் துடிக்கிறது டிரம்ப் நிர்வாகம்” –மக்ரோன் கடும் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பகிரங்கமாக முயற்சிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் ஐரோப்பிய நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியொன்றில், டிரம்ப் நிர்வாகம் தற்போது வெளிப்படையாகவே ‘ஐரோப்பிய எதிர்ப்பு’ (Anti-European) கொள்கையைக் கடைப்பிடிப்பதாக மேக்ரான் சாடியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவிழக்கச் செய்து, அதனைத் துண்டு துண்டாகச் சிதறடிக்க (Dismemberment) அமெரிக்கா முயல்வதாக அவர் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவின் டிஜிட்டல் சட்டங்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை அமெரிக்கா குறிவைப்பதாகவும், இதற்குப் பயந்து அடிபணியக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை விடுத்து, ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலிமையை பெருக்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் மீண்டும் ஒருமுறை ‘ஐரோப்பிய இறையாண்மை’க்காகக் குரல் கொடுத்துள்ளார்.

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, கிரீன்லாந்து விவகாரம் மற்றும் வர்த்தக வரிகள் தொடர்பாக ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், மேக்ரானின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Recommended For You

About the Author: admin