பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாற்றில் மிக மோசமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகின்றது.
நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பா்சாலையில் (Tumbler Ridge Secondary School) துப்பாக்கித் தாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா்.
மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் உள்ளே 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடசாலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
துப்பாக்கிதார தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலையின் உள்ளே கண்டெடுக்கப்பட்டார்.
: சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பழுப்பு நிற முடி (Brown hair) கொண்டவர் என்றும், ஒரு ஆடை (Dress) அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினா் அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ள போதிலும், தற்போதைய விசாரணைக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிடவில்லை.
பிரதமர் மார்க் கார்னி (PM Mark Carney) இச்சம்பவத்தால் தான் கடும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாகாண முதல்வர் டேவிட் ஈபி (Premier David Eby) டம்பிளர் ரிட்ஜ் சமூகம் முழுவதுமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

