ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி!

ஐரோப்பிய ஒன்றியத்தில் சாதனை படைத்த ரஷ்ய எரிவாயு இறக்குமதி!

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தாலும், எரிவாயுத் தேவையைப் பொறுத்தவரை ரஷ்யாவுடனான அதன் பிணைப்பு இன்னும் வலுவாகவே இருப்பதை அண்மைக்கால தரவுகள் காட்டுகின்றன.

📊 புதிய உச்சம்: 2026 ஜனவரி மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து சுமார் 2.276 பில்லியன் கன மீட்டர் (bcm) LNG-ஐ இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2025 டிசம்பர் மாதத்தை விடவும் அதிகம்.

2027-ஆம் ஆண்டு முதல் ரஷ்ய எரிவாயுவுக்கு முழுமையான தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த திடீர் உயர்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் ‘யமால் எல்என்ஜி’ (Yamal LNG) திட்டத்திலிருந்து அதிகளவில் எரிவாயுவை வாங்கியுள்ளன.

காரணம் ஐரோப்பாவில் நிலவும் கடும் குளிர்காலம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய நாடுகள் அதிகளவில் எரிவாயுவை சேமித்து வருகின்றன.

🛳️ ரஷ்யா தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிவாயு விநியோகத்தில் (நோர்வே, அமெரிக்கா மற்றும் அல்ஜீரியாவுக்கு அடுத்தபடியாக) நான்காவது பெரிய இடத்தில் உள்ளது. 2027 முதல் முழுமையான தடையை அமல்படுத்த ஐரோப்பிய ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாலும், தற்போதைய தட்டுப்பாடுகள் அதற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன

Recommended For You

About the Author: admin