ஒற்றையாட்சி பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்பி தனக்காக நீதி கேட்கிறார்.

அன்ரன் பாரசிங்கம் எவ்வாறு அண்ணனுக்கு தேவையோ சுமந்திரன் எங்களுக்கு தேவை. சொன்னவர் வேறு யாரும் அல்ல சிறிதரன் எம்பி இது பழைய கதை தமிழரசு கட்சி சுமந்திரன் பக்கம் என்பது சிறிதரன் பாராளுமன்றத்தில் தனக்கு நீதி கேட்டதில் இருந்து தெளிவாகிறது.

சுமந்திரன் தொடர்பில் அரசியல் நீதியான மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தமிழரசு கட்சியில் சுமந்திரன் ஒருவரே ஆளுமை ஆனவர்.

இதை யாரும் மறுக்க முடியாது ஆளுமையானவர்களை புறந்தள்ளியதன் விளைவு.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அனுரா அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்துடனான ஒற்றையாட்சி பாராளுமன்றத்தில் தனக்காக நீதி கேட்கிறார்.

இதில் இரண்டு விடயங்கள் தெளிவாகிறது தமிழ் மக்களுக்காக இவர்களால் சர்வதேச நீதியை பெற்றுக் கொடுக்க முடியாது.

இரண்டாவது தமிழரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தனது கட்சிக்குள் நீதி கிடைக்காது தமிழரசு சுமந்திரன் பக்கம் ஆகவே ஒற்றை ஆட்சி பாராளுமன்றத்தில் நீதி கேட்கிறார்.

ஆக மொத்தத்தில் தமிழ் மக்கள் பாவம்..

Recommended For You

About the Author: admin