விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 500,000 ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா இல்லாமல் தங்கியிருந்த சந்தேக நபரை வெலிசரை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, புகார்தாரரிடம் குறித்த தொகையைக் கோரியுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசரை தடுப்பு மையத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.