48 மணி நேரத்தில் 12 நாடுகளுடன் தொலைபேசியில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர்

48 மணி நேரத்தில் 12 நாடுகளுடன் தொலைபேசியில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர்

கடந்த 48 மணி நேரத்திற்குள் 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஈரானின் IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிராந்திய பாதுகாப்பு, கடல்சார் ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்கா–இஸ்ரேலுடனான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தை நடத்திய 12 நாடுகள்:

 

1. ஓமன்

2. எகிப்து

3. ஜோர்டான்

4. சவுதி அரேபியா

5. கத்தார்

6. சைப்ரஸ்

7. துருக்கி

8. குவைத்

9. ஐக்கிய அரபு அமீரகம்

10. துனிசியா

11. ஈராக்

12. பாகிஸ்தான்

மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஈரான் மேற்கொண்டுள்ள இந்தத் தொடர் பேச்சுவார்த்தைகள் பிராந்திய இராஜதந்திர நகர்வுகளில் கவனம் பெற்றுள்ளன.

Recommended For You

About the Author: admin