யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை மாலை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 19 ஆயிரத்து 560 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 77 பாதுகாப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 271பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தலகள் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.