தொடரும் சோகம்.. யாழில் 21 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு..
யாழ்ப்பாணம் – துன்னாலை வடக்கை வசிப்பிடமாக கொண்ட பத்மநாதன் அபிராம் (வயது-21) என்ற இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த துயரச் செய்தி அப்பகுதி மக்களையும் உறவினர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
இவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர் பத்மநாதன் அவர்களின் மற்றும் துன்னாலை வடக்கு மெ.மி.த.க. பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியை சாந்தினி அவர்களின் அன்பு மகனாவார்.
இளம் வயதில் நிகழ்ந்த இப்பிரிவு குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
”எந்தவொரு பிரச்சினைக்கும் இது முடிவல்ல”
“உதவி தேவைப்படுபவர்கள் இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்”

