முல்லைத்தீவில் 2 395 குடும்பங்களைச் சேர்ந்த 7 524 பேர் பாதிப்பு . அரச அதிபர் உமாமகேஸ்வரன் தெரிவிப்பு.
முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2ஆயிரத்து 395 குடும்பங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் உமா மகேஸ்வரன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலடனை காரணமாக உள்ள தீவு மாவட்டத்தில் குளங்கள் பெருக்கெடுத்த அதன் காரணமாக மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களான துணுக்காய் ,வெலிஓயா, புதுக் குடியிருப்பு ,ஒட்டி சுட்டான், மாந்தைகிழக்கு மற்றும் மரிதம்பட்டு ஆகிய பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேச செயலகங்களில் சுமார் 7,86 குடும்பங்களைச் சேர்ந்த 2ஆயிரத்து 400 பேர் வீடுகளை விட்டு உறவினர் வீடுகளில் வசித்து வருகின்ற நிலையில் 46 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
ஆகவே மழையுடனான காலநிலை தொடர்வதனால் மேலும் பாதிப்புகள் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இடைதங்கல் முகங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.