யாழில் மூவர் பயணித்த மோட்டார்சைக்கிள் மதிலில் மோதியதில் இருவர் பலி ஒருவருக்கு காயம்.!!

யாழில் மூவர் பயணித்த மோட்டார்சைக்கிள் மதிலில் மோதியதில் இருவர் பலி ஒருவருக்கு காயம்.!!

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் இருவர் பலி.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை  அளவெட்டி அலுக்கை சந்தியில் (01) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தின் போது மதில் இருவருக்கும் மேல் விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சஞ்சய் (வயது 16) ரஜீவன் (வயது 36) ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் அளவெட்டி நோக்கி பயணித்த போது, வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மதில் இவரகளுக்கு மேல் விழுந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரு இளைஞர்களின் மரணத்தை அறிந்த பெற்றோர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சில மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதால், பொலிஸார் அழைக்கப்பட்டு, பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன

Recommended For You

About the Author: admin