நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 24 மணித்தியாலங்களையும் உள்ளடக்கிய விசேட நடவடிக்கை அறையொன்று பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு பிரிவின் பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அவசரகால சூழ்நிலைகள், இடப்பெயர்வுகள் மற்றும் உதவிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி எண்கள்
107
011-2027148
011-2472757
011 – 2430912
011-2013051
மின்னஞ்சல் முகவரி
disaster.ops@police.gov.lk