அடுத்த 100 நாட்களில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 இராசிகள்!

அடுத்த 100 நாட்களில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 இராசிகள்! சனி பகவானால் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்

நவகிரகங்களில் சனி பகவானின் பெயர்ச்சி மற்றும் நட்சத்திர மாற்றத்திற்கு ஜோதிட சாஸ்திரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒருவரது செயல்களுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கக்கூடிய கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார்.

 

ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கிப் பயணிக்கும் சனியின் நிலை, ஒருவரது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

 

தற்போது மீன இராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனி பகவான், கடந்த அக்டோபர் மாதம் ரேவதி நட்சத்திரத்திலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு மாறியுள்ளார்.

 

இந்த நட்சத்திரத்தில் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை சஞ்சரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

சனியின் இந்த நட்சத்திர மாற்றம் சில இராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில இராசிக்காரர்களுக்கு செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

அந்த வகையில், அடுத்த 100 நாட்களில் சாதகமான மாற்றங்களையும் அதிர்ஷ்டத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் 5 இராசிகள் குறித்து பார்க்கலாம்.

 

ரிஷபம் : சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் ரிஷப இராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான தடைகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படலாம்.

 

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், பொறுப்புகளும் அதிகரிக்கலாம். தைரியத்துடனும் கடின உழைப்புடனும் செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

 

மிதுனம் : மிதுன இராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் மற்றும் குழப்பங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

 

நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரலாம். பணம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை. வேலைவாய்ப்பு தொடர்பாகவும் நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும்.

 

துலாம் : துலாம் இராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில் அடுத்த 100 நாட்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கலாம். வேலை மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். சிலருக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இதன் மூலம் நிதி நிலைமை மேம்படுவதுடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக்கூடும்.

மகரம் : மகர இராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் சாதகமான காலமாக அமையக்கூடும்.

பணிபுரிபவர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கலாம்.

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வருமானத்திற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.

நிதி நிலைமை வலுப்பெறுவதோடு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளும் நிறைவடையக்கூடும்.

கும்பம் : கும்ப இராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையக்கூடும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இருப்பினும், ஏழரைச் சனியின் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் சில சவால்களையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

எனவே, பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது அவசியம் என ஜோதிடக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

Recommended For You

About the Author: admin