இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2014இல் 2226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018இல் 2967 ஆக அதிகரித்துள்ளது.
பின் புலிகளின் எண்ணிக்கை 3682 ஆக உயர்ந்தது.
அதன்படி பார்க்கையில் வருடத்துக்கு 6 சதவீதம் என்ற வீதத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டு 76 புலிகளும் 2010 ஆம் ஆண்டில் 163 புலிகளும் 2014 இல் 229 புலிகளும் 2018 இல் 264 புலிகளும் 2022 இல் 306 புலிகளும் என அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேட்டையாடுதல் போன்ற பல காரணங்களினால் தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு முதல் 5 புலிகள் வரையில் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.