சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு

சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு

வட்டவளை பிரதேசத்தில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவினால் சேதமடைந்த வட்டவளை ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத்தை முழுமையாகப் புனரமைக்கும் பொறுப்பு, ரயில்வே திணைக்களத்தால் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த ரயில் நிலையத்தின் சேத விவரங்களை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி நேற்று நேரில் சென்று ஆராய்ந்தார். அத்துடன், சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

 

ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத்தின் பின்புறமாக அமைந்திருந்த பாரிய மலைப்பகுதியில் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, ரயில் நிலையத்தின் பிரதான கட்டடத் தொகுதி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 

இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி வட்டவளை ரயில் நிலையத்தின் சரக்குக் களஞ்சியக் கட்டடத்தைத் தற்காலிக ரயில் நிலையமாகப் பயன்படுத்தும் நோக்கில், ரயில்வே திணைக்களத்தின் பொறியியல் பிரிவினர் அங்கு அவசர புனரமைப்புப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin