இஸ்ரேலிய இராணுவம் லெபானான் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை நடத்திய பின்னர் 60 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் லெபானான் மீது தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு லெபனானில்
இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது.
லெபானான் மீது தரைவழி மற்றும் வான் தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்தது. அதற்கு ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை முயற்சி மேற்கொண்ட போதிலும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டாமல் இருந்து வந்தது.