மேசைக்குள் மறைத்து ரூ. 15.8 கோடி பெறுமதியான போதைப்பொருள் கடத்தல்!

மேசைக்குள் மறைத்து ரூ. 15.8 கோடி பெறுமதியான போதைப்பொருள் கடத்தல்!

தாய்லாந்திலிருந்து அன்பளிப்புப் பொதியாக அனுப்பப்பட்ட மேசைப் பாகங்களுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 158 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 

பேலியகொடை சுங்கக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 13.37 கிலோ ஹஷீஷ் மற்றும் 2.42 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் தொடர்பில் ராகமையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin