அனைத்து இலங்கையர்களுக்கும் வணக்கம்.
நான் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர்.
அண்மைய பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்வதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது.
தெரண தொலைக்காட்சி மற்றும் ஹிரு தொலைக்காட்சி போன்ற சில ஊடகங்கள் கடந்த சில நாட்களாக காணொளிகளை தவறாக சித்தரித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பயங்கரவாதியாக என்னை சாதகமற்ற வகையில் சித்தரிக்கும் வீடியோக்களை தேர்ந்தெடுத்து எடிட் செய்துள்ளன.
இந்த விடயங்களை சிங்களத்தில் தெளிவுபடுத்துவதற்கு நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன், எனினும் பலர் தொடர்ந்தும் வீடியோக்களில் இருந்து தவறான துணுக்குகளை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழர்களாகிய நாங்கள் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இணக்கமாக வாழ விரும்புகிறோம். நம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் உங்கள் புரிதலையும் ஆதரவையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா Mp