தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்.
பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.