பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.
சமன்மலி குணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 59,657 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளதோடு, அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டத்தில் 58,201 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹெச்சிகே 131,375 வாக்குகளுடனும், ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டத்தில் 69,232 வாக்குகளுடனும், சரோஜா போல்ராஜ்- மாத்தறை மாவட்டத்தில் 148,379 வாக்குகளுடனும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
நிலுஷா கமகே – இரத்தினபுரி மாவட்டத்தில் 48,791 வாக்குகளையும், சாகரிகா அதாவுத – கேகாலை மாவட்டத்தில் 59,019 வாக்குகளையும் ஹிருணி விஜேசிங்க – புத்தளம் மாவட்டத்தில் 44,057 வாக்குகளையும் கௌசல்யா ஆரியரத்ன – கொழும்பு மாவட்டத்தில் 80,814 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தேசிய மக்கள் சக்தி சார்பாக சதுரி கங்கானி மொனராகலை மாவட்டத்தில் 42,930 வாக்குகளையும், துஷாரி ஜயசிங்க கண்டி மாவட்டத்தில் 58,223 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, ஹஸார லியனகே காலி மாவட்டத்தில் 82,058 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்கவுள்ளனர்.
அத்தோடு, மாத்தளை மாவட்டத்தில் 47,482 தீப்தி வாசலகே, குருநாகல் மாவட்டத்தில் 84,414 வாக்குகளுடன் குமாரி ஹேரத், கம்பஹா மாவட்டத்தில் 66,737 வாக்குகளைப் பெற்று ஹேமாலி சுஜீவா ஆகியோர் நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாத்தளை மாவட்டத்தில் 27,845 வாக்குகளைப் பெற்ற ரோஹினி குமாரி விஜேரத்ன, கண்டி மாவட்டத்தில் 30780 வாக்குகளைப் பெற்ற சமிந்திரானி கிரியெல்ல ஆகியோரும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, அந்தந்த அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இருந்து மற்றுமொரு பெண்கள் குழுவும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.