புத்தளம், சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தடியொன்றினால் தாக்கியே குறித்த நபரை கொலை செய்துள்ளனர்.
இச் சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் 35 வயது நபர் என்றும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு மதுபான விருந்தில் கலந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அதில் கலந்துகொண்டிருந்த இருவர் இக் கொலையை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் 23 மற்றும் 24 வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.