இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் நடைபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இதேவேளை, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
நாடளாவிய ரீதியில் 60 வீதம் முதல் 65 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றதாக தேர்தல்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.