மருதானை – ரயில்வே குடியிருப்புக்கு முன்பாக, ஜீப் ஒன்றை வீட்டுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளது.
நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ரயில்வே குடியிருப்பு உள்ள மருதானை பகுதியில் வசித்து வந்த 3 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளது.
தந்தை தனது ஜீப்பை நிறுத்துவதற்காக வீட்டுக்கு அருகில் ஜீப்பைப் பின்னோக்கிச் செலுத்தியபோது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.