மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் இன்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் தயாரிக்கப் பட்ட வீதி நாடகமே இன்றைய தினம்,(07.11) வியாழன் காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு வீதி நாடகத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.
குறித்த வீதி நாடகமானது வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரங்கேற்றப்படும் நோக்கில் கடந்த நான்காம் திகதி (4) யாழ்ப்பாணத்திலும், ஐந்தாம் திகதி (5) முல்லைத்தீவிலும், ஆறாம் திகதி (6)கிளிநொச்சியிலும், இந்த வீதி நாடகமானது அரங்கேற்றப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மன்னார் நகரப் பேருந்து நிலையத்திலும் அதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேசத்திலும் அரங்கேற்றப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.