பேரணி அறிவித்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம்! பொலிஸாரிடம் லால்காந்த கோரிக்கை

தேர்தல் சட்டத்தின்படி பேரணிகளூடாக பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது அல்லவென தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் குழுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் எனவே இதுபோன்ற சுவரொட்டிகளை தொட வேண்டாமெனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியின் பிரசார சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் கண்டி பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin