காலியில் ரயிலுடன் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதி விபத்து; 8 பேர் காயம்!
இலங்கையின் காலி, ஹபராதுவ பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொக்கல – காலி ரயில் பாதையில் அமைந்துள்ள ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

