இலங்கை போக்குவரத்துச் சபையின் 200 மின்சாரப் பேருந்துகள் திட்டம் முடக்கம்!
இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 200 மின்சாரப் பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம், கொள்வனவு நடைமுறையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்மை காரணமாகத் தாமதமடைந்துள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2023ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கிய இத்திட்டம், திட்டமிட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பத்து ஏலதாரர்கள் ஆவணங்களைக் கொள்வனவு செய்தபோதிலும், ஒருவர் மட்டுமே விலைமனுவைச் சமர்ப்பித்துள்ளார். அவரும் தேவையான வணிகச் செயல்திறன் பிணையைச் சமர்ப்பிக்கத் தவறியதால் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார்.
2025 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

