எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு பதவி ஒன்றைப் பெறவா செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அப்படி இல்லை என்றும் ஓய்வெடுக்க வெளிநாடு செல்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் பல விரிவுரைகளுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.