செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் கமிந்து

2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.

இந்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூரிய மற்றும் அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.

அவர்களை வீழ்த்தி கமிந்து மெண்டிஸ் இந்த விருதை வென்றார்.

கமிந்து மெண்டிஸ் செப்டம்பரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90.20 சராசரியில் 451 ஓட்டங்களை எடுத்தார்.
இதுவரை 8 டெஸ்டில் 5 சதங்கள் அடித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin