2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கென்ய தடகள வீரர் கிபிகோன் பெட் (Kipyegon Bett) காலமானார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பால் நீண்ட காலமாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த 26 வயதான வீரர் ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்தார்.
இவர் 2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
அதேநேரம், ஜூனியர் மட்டத்தில் பல பதக்கங்களை வென்ற கிபிகோன் பெட் கென்யாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இவரது செய்தி தடகள உலகத்தை உலுக்கியுள்ளது.