கடந்த அரசாங்கத்தின் பல திட்டங்கள் இரத்து!

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் “வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்”, “பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்” மற்றும் “விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்” ஆகியவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்கள் / ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால் அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் சேவையை 2024-09-30 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கௌரவ ஜனாதிபதி அமைச்சரவையை தெளிவுபடுத்திய பின்னர் அமைச்சரவை அதற்கான ஒப்புதலை வழங்கியது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin