இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா

கோலிவுட்டில் பட்டையைகிளப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அமீர்கான் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தின் இந்தி ரீ-மேகில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

தற்போது, மகாராஜா திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிப்பதும் இவர்தான் என பொலிவுட் திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Recommended For You

About the Author: admin