2024 – ஆசியக் கிண்ணம் சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி

ஆசியக்கிண்ணத்தை முதன்முறையாக தனதாக்கி இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி (28) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

Recommended For You

About the Author: admin