‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்தும் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன், லத்தி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதனையடுத்து சுனைனாவுக்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்க, அண்மையில் அவரது கையுடன் இன்னொரு கை இணைந்திருப்பதைப் போன்ற புகைப்படமொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கலித்தும் கடந்த வாரம் அவருக்கு நிச்சயம் முடிந்துவிட்டதை பகிர்ந்துகொண்டார்.
அந்தப் புகைப்படத்தில் இருப்பது யாரென்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில் சுனைனா டுபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரியைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.