இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 317 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin