மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது மூசா ஜமீர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜமீருடன் மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் இலங்கை விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.