இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி இன்னும் 30 நாட்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி பட கதையையும் இணைத்து நாக அஸ்வின் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
அந்த படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி கார் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக சாலைகளில் வலம் வந்துள்ளது.
கல்கி படத்தின் புஜ்ஜி காருக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
சாத்தியமில்லாத ஒரு பிரம்மாண்ட காரை அதுவும் நிஜ சாலையில் ஓடக்கூடிய கண்டிஷன் உடன் உருவாக்கி உள்ளனர். சுமார் 2 ஆண்டுகள் இந்த ஒரு காலை மட்டும் உருவாக்கவே செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புஜ்ஜி காரின் விலை மட்டும் 8 கோடி ரூபாய் என்கின்றனர்.
புஜ்ஜி காரை டோலிவுட் நடிகர் நாக சைதன்யா ஓட்டி பார்த்த நிலையில், அடுத்ததாக இந்தியாவின் எஃப் ஒன் கார் ரேசர் நரேன் கார்த்திக் இந்த காரை ஓட்டிப் பார்த்துள்ளார்.
அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்ட்டாகி வருகின்றது.