வாரிசு நடிகர்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் உமாபதி தம்பி ராமையா.
தமிழில் விஷாலுடன் பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா.
உமாபதியும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் நடத்தப்பட்ட சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் உமாபதி.
இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் திடீரென நிச்சயதார்த்தம் என்ற செய்தி பரவியது.
இந்த செய்தி சினிமாவைச் சேர்ந்தவர்களுக்கும் இரசிகர்களுக்கும் இனிப்பான ஒரு செய்தியாகவே இருந்தது.
இந்நிலையில் உமாபதி – ஐஸ்வர்யா திருமணம் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி கெருகம்பாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அர்ஜூனின் தோட்டத்தில் நடக்கவுள்ளதாம்.
முதலாவது அழைப்பிதழை அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா குடும்பமாக சென்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கு சென்று கொடுத்துள்ளனர்.
வித்தியாசமாக பெட்டி வடிவமைப்பில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பத்திரிகையின் விலை ரூபாய் 5000ஆகும் இருக்குமென கூறப்படுகிறது.