”எங்களுக்கு மதுபான கடை வேண்டாம்“: யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரபல்யமான பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல சமூக விரோத நடவடிக்கைகள் ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றது.

இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாகைகளை தாங்கியும், மதுபான சாலையை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மதுபான சாலையை நிறுத்த கோரி கையொப்பமும் பெறப்பட்டது.

ஊர்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகள் தாங்கியவாறு உள் நுழைந்து ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜரையும் கையளித்தனர்.

Recommended For You

About the Author: admin