யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் – ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின் பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் லான்ட் மாஸ்ரர் சாரதி உட்பட லான்ட் மாஸ்ரரில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிட்சை பெற்று வருகின்றனர்.