கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு (y-o-y) அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதம் 1.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) கூறுகிறது.
கடந்த மாதம், புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையிலான பணவீக்கம் 0.9 வீதம் என கணக்கிடப்பட்டது.
ஆண்டு அடிப்படையில், உணவு பணவீக்கம் கடந்ம மார்ச் இல் 3.8 வீதமாக இருந்தது. ஆனால், அது ஏப்ரலில் 2.9 வீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் உணவு அல்லாத குழுவின் பணவீக்கம் மார்ச் இல் 0.5 வீதமாக இருந்தது. அது ஏப்ரல் மாதத்தில் 0.9 வீதமாக உயர்ந்தது.
போக்குவரத்து, மதுபானங்கள், புகையிலை, போதைப் பொருட்கள், கல்வி, உணவகங்கள், ஹோட்டல்கள், இதர பொருட்கள் மற்றும் சேவைகள், வீடுகள், நீர், மின்சாரம், எரிவாயு, பொழுதுபோக்கு, பிற எரிபொருள்கள் மற்றும் ஆரோக்கியம், கலாச்சாரம், தகவல் தொடர்பு, ஆடை மற்றும் பாதணிகள், வீட்டு உபகரணங்களை வழங்குதல் மற்றும் வழக்கமான வீட்டு பராமரிப்பு என்பன 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது.