தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் 2,400 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரமே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக 165 கணக்காய்வு அத்தியட்சகர்கள் மற்றும் 465 கணக்காய்வு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளனர்.
கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கு சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.