இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
196 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர்.
போட்டி சற்று தீர்க்கமான நிலையில் சாம்சன் மற்றும் ஜூரல் இன் கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.
இருவரும் அரை சதத்தை பதிவு செய்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் வெற்றி ஓட்டங்களை குவித்தார்.
களத்தில் அமைதியான நடத்தைக்கு பெயர் பெற்ற சாம்சன், இந்த வெற்றியை அனிமேஷன் பாணியில் கொண்டாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாம்சன் 71 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் விளையாடிய நிலையில் இறுதியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.