ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்ய விரும்பும் தம்மிக்க

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கையகப்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விவரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த 6 தரப்பினரின் விபரங்கள் கீழே,

1. AirAsia Consulting Sdn. Bhd.

2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd

3. FITS Aviation (Private) Limited

4. Sherisha Technologies Private Limited

5. Treasure Republic Guardians Limited

6. Hayleys PLC

இங்கு Hayleys PLC என்பது இலங்கையில் பலதரப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஒரு பெரிய குழுவாகும் மற்றும் கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா அதன் கட்டுப்பாட்டு பங்குதாரராக காணப்படுகிறார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியாகும் போது Hayleys PLC இன் பங்கு மூலதனத்தில் 51.01 வீதமானது தம்மிக்க பெரேராவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin