அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் நீர்த்தாங்கி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கழிவறையில் உள்ள நீர்த்தாங்கியில் இருந்து பொருத்தப்பட்டிருந்த குழாயில் நீராடி கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமியின் உடலில் நீர் தாங்கி வீழ்ந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ருஹுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 03 வயதும் 07 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த நிலையில், சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை (14) முன்னெடுக்கப்படவுள்ளது.