பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், கேக் தான் வெட்டுவோம்.
ஆனால், அஜய் என்பவர் கேக்குக்கு பதிலாக பப்பாளிப் பழத்தை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
அனைவரது பிறந்தநாளிலும் இருப்பதைப் போல அலங்காரங்கள், பலூன்கள், பேனர்கள் அனைத்தும் இவரது பிறந்தநாளிலும் இருக்கிறது.
ஆனால், மேசையில் கேக்குக்கு பதிலாக பெரிய பப்பாளிப்பழம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதனை அஜய் வெட்டியதும் சுற்றியிருந்தவர்கள் வழக்கமாக பாடும் பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டை பாடினர்.
இந்த வித்தியாசமான பிறந்தநாள் விழா அனைவரையும் கவர்ந்துள்ளது.