வேட்டையன் ரிலீஸ் ஒக்டோபரில்!

வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரிலீசாகும் என புதிய அப்டேட் ஒன்றை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வேட்டையன் திரைப்படத்தை செ. ஞானவேல் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கின்றார்.

80 சதவிகித காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா , ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடிக்கின்றனர்.

khk

Recommended For You

About the Author: admin