அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கமானது.
கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 116 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 8.7 இலட்சம் கோடி) சொத்து மதிப்போடு இந்திய/ ஆசியளவில் முதலிடத்தில் உள்ளார்.
உலகளவில் 9வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். 100 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பு கொண்ட பட்டியலில் அம்பானி இந்தாண்டு இணைகிறார். கடந்த ஆண்டு 83 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கு அடுத்த இடத்தில் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார். உலகளவில் 17வது இடத்தில் இவர் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 84 பில்லியன் அமெரிக்க டொலர்.
சாவித்திரி ஜிண்டால் இந்தியாவின் அதிக சொத்துள்ள பெண்ணாக திகழ்கிறார். இவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டொலர்.
25 இந்தியர்கள் புதிதாக பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முன்னர் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்ட்ரி இந்தாண்டு பட்டியலில் இடம்பெற்றவில்லை.
முதல் 10 இடத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பைப் பார்ப்போம்.
முகேஷ் அம்பானி – ரூ. 8.7 இலட்சம் கோடி
கெளதம் அதானி – ரூ. 6.3 இலட்சம் கோடி
ஷிவ் நாடார் – ரூ. 2.7 இலட்சம் கோடி
சாவித்திரி ஜிண்டால் – ரூ.2.5 இலட்சம் கோடி
திலிப் ஷாங்வி – ரூ.2 இலட்சம் கோடி
சைரஸ் பூனாவாலா -ரூ. 1.6 இலட்சம் கோடி
குஷல் பால் சிங் -ரூ. 1.56 இலட்சம் கோடி
குமார் பிர்லா -ரூ. 1.4 இலட்சம் கோடி
ராதாகிஷன் தமானி -ரூ.1.3 இலட்சம் கோடி
லக்ஷ்மி மிட்டல் -ரூ.1.2 இலட்சம் கோடி