பாடசாலை மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்தும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி, பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற மாணவன் மீது குறித்த அதிகாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
பந்துராகொட நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதுடைய குறித்த பாடசாலை மாணவனும் அதே பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
தாக்குதல் மேற்கொண்டதையடுத்து சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் , எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.